Thirai Naanooru
1 min readOct 7, 2019

--

``கதை சொல்லும் அழகுக்காகவே இதைப் பார்க்கவேண்டும்!” — #TheBalladOfBusterScruggs ஒரு பார்வை!

பாபு சுப்பிரமணியன்

வெஸ்டர்ன் சினிமா ரசிகர்களுக்கு, நெட்ஃபிளிக்ஸில் கோயென் சகோதரர்களின் விருந்து. #TheBalladOfBusterScruggs

மூலம்

அமெரிக்காவில் சுமாராக 1860-லிருந்து 1910-வரை மேற்குப் பகுதியில் சட்டம், ஒழுங்கு இல்லாத நிலையில் எல்லை ஊரில் (frontier town) வாழும் மக்களையும், அவர்களது போராட்டங்களையும் பற்றிய படங்களே வெஸ்டர்ன். பெரும்பாலும் அவை நாடோடியாகச் சுழல் துப்பாக்கியுடன் குதிரைமேல் செல்லும் மேய்ப்பாளன் (cowboy) பற்றியவை. ரயில் பாதை வந்து நாகரிகம் எல்லை ஊருக்குள் நுழையும்போது, மேய்ப்பாளன் ஊரை விட்டு இன்னும் மேற்கே செல்வான். கோயென் சகோதரர்களான ஜோயெல் கோயெனும், ஈதன் கோயெனும் எடுத்த `நோ கன்ட்ரி ஃபார் ஓல்ட் மென்’ 1980-ல் நடந்தாலும், வெஸ்டர்னுக்கான அம்சங்கள் இருப்பதால், அதைப் புதிய வெஸ்டர்ன் என்கிறார்கள். 2010-ல் அவர்கள் எடுத்த `ட்ரூ க்ரிட்’ பழங்காலத்தில் நடப்பதால், அதுதான் அவர்களின் முதல் வெஸ்டர்ன். அதுகூட ஒரு பழைய படத்தின் ரீமேக். தற்போது அவர்கள், 25 வருடங்களுக்கு முன்னால் எழுதிய சிறுகதைகளுடன், ஜாக் லண்டனின் சிறுகதை ஒன்றையும் சேர்த்து `தி பேலட் ஆஃப் பஸ்டர் ஸ்க்ரக்ஸ்’ என்ற வெஸ்டர்ன் படத்தை எடுத்திருக்கிறார்கள். ஆறு கதைகளின் திரட்டான இந்தப் படத்தில் ஒவ்வொரு கதையும் பச்சை வண்ண அட்டைகொண்ட, பைண்ட் செய்யப்பட்ட படங்கள் அடங்கிய ஒரு பழைய புத்தகத்தைக் காண்பித்த பின், அத்தியாயங்களாக விரிகிறது.

முழு விமரிசனத்தை விகடன் டாட் காமில் படிக்கலாம்:

Babu Subramanian

#TheBalladOfBusterScruggs #MovieReview #Tamil #WorldCinema

--

--