10 ஆஸ்கர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட டேவிட் ஃபின்சரின் ‘Mank’ வாழ்க்கை வரலாற்றுப் படமா, கட்டுக் கதையா?

பாபு சுப்பிரமணியன்

‘Mank’/ David Fincher/ USA/ 2020

மேன்க்’ இல் அமண்டா ஸைஃபிரெட் மற்றும் கேரி ஓல்ட் மேன்

நெட்ப்ளிக்ஸில் டிசம்பர் 2020 இல் வெளியிடப்பட்டது டேவிட் ஃபின்சர் இயக்கிய ‘மேன்க்’. இது, 1941 இல் வந்த திரை வரலாற்றில் ஆகச் சிறந்ததாகக் கருதப்படும் கிலாசிக்கான (classic) ‘சிட்டிசன் கேன்’ படத்திற்கு திரைக்கதை எவ்வாறு எழுதப் பட்டது என்பதைப் பற்றியதால் திரை ஆர்வலர்கள் இதைப் பார்க்க விரும்புவார்கள். அந்த ஆர்சன் வெல்ஸ் படத்தில் கேன் இறப்பதற்கு முன் சொன்ன “ரோஸ்பட்” என்ற சொல்லின் பொருள் தேடி நிருபர் ஜெர்ரி தாம்சன் அலைந்தது மர்மமாக இருந்தது. அது போன்று அந்தப் படத்தின் திரைக்கதையின் படைப்பாளியாக யாரைச் சொல்லலாம் என்பதும் மர்மமாக்கப் பட்டது. படத்தில் பெயர் போடும்போது ஹெர்மன் மேன்கீவிஸும் ஆர்சன் வெல்ஸும் இணைந்து எழுதியதாக வருகிறது. அதன்படி அவர்கள் இருவருக்கும் சுயமாக எழுதப் பட்ட திரைக்கதைக்கான ஆஸ்கர்…


அனன்யா காசரவல்லியின் கன்னடப் படம் (2016)

பாபு சுப்பிரமணியன்

‘ஹரிகதா பிரசாங்கா’வில் ஸ்ருங்கா வாசுதேவன்

கடந்த ஐந்து வருடங்களில் பார்த்த இந்திய கலைப் படங்களில் நினைவில் நின்ற சிலவற்றில் அனன்யா காசரவல்லியின் ‘ஹரிகதா பிரசாங்கா’ (2016) ஒன்று. இது அதிகம் எழுதப் படாததால் இதை சற்று விரிவாகப் பார்க்கலாம். கர்நாடகாவின் பாரம்பரிய நாடக வடிவமான யக்ஷகானாவை பின்னணியாகக் கொண்டது இந்தப் படம். யக்ஷகானாவில் காவிய, புராணக் கதைகளை நாட்டியம், உரையாடலுடன் ஒரு கோஷ்டி நடித்துக் காண்பிக்கும். இன்னொரு கோஷ்டி அரங்கின் பின்னால் அமர்ந்து கொண்டு இசை அளிக்கும். ஆண்கள் மட்டுமே நடிக்கும் மரபு யக்ஷகானாவில் இருந்தது. முற்றிலும் பெண்களைக் கொண்ட குழுக்கள் இப்போது இருக்கின்றன.


புதை குழியான ஆஃப்கானிஸ்தானிலிருந்து 1989 இல் சோவியத் ரஷ்யா மீண்ட கதை

பாபு சுப்பிரமணியன்

‘லீவிங் ஆஃப்கானிஸ்தான்’

அமெரிக்கப் படை முழுவதும் ஆஃப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி நாடு திரும்புமென்று அறிவிக்கப்பட்ட பின் உலகத்தின் கவனம் ஆஃப்கானிஸ்தான் மேல் திரும்பியது. இந்த சமயத்தில் சோவியத் யூனியன் 1989இல் ஆஃப்கானிஸ்தான் என்ற புதை குழியிலிருந்து மீண்டு நாடு திரும்பியதை பவெல் லங்கின் இயக்கிய ‘லீவிங் ஆஃப்கானிஸ்தான்’ (2019) என்ற ரஷ்யப் படத்தில் பார்க்கலாம். லங்கின், ‘டேக்சி ப்ளூஸ்’ (1990) என்ற படத்தின் மூலம் ரஷ்ய சினிமாவில் புதுமை புகுத்தி கேன் பட விழாவில் சிறந்த இயக்குனர் பரிசு பெற்றவர். இதைத்தவிர ‘தி ஐலண்ட்’ (2006) மற்றும் ‘ஜார்’ (2009) போன்ற படங்களுக்காக பேசப்பட்டவர்.


பெங்களூரு திரை விழா 2020 இல் ஆண்ட்ரெய் டார்கோவ்ஸ்கியை திரும்பிப்பார்க்கும் பகுதியில் உள்ள அவரது படைப்புகள் — ஒரு அறிமுகம்

பாபு சுப்பிரமணியன்

An Introduction to Andrei Tarkovsky Retrospective

ஆண்ட்ரெய் டார்கோவ்ஸ்கி

உலக சினிமாவை சுமாராகப் பாத்தவர்களுக்குக் கூட ரஷ்ய திரைச் சிற்பியான ஆண்ட்ரெய் டார்கோவ்ஸ்கியின் படங்கள் பிடிபடாமல் போகலாம். டார்கோவ்ஸ்கி பற்றி இன்னொரு தலை சிறந்த இயக்குனரான இங்மார் பெர்க்மன் பாராட்டிக் கூறியது டார்கோவ்ஸ்கியை நன்றாகப் புரிந்து கொள்ளவும், டார்கோவ்ஸ்கியின் முதன்மையான இடத்தை அறிந்து கொள்ளவும் உதவுகிறது: “டார்கோவ்ஸ்கியின் முதல் படத்தை நான் கண்டு பிடித்தது ஒரு அதிசயம் போன்றது. திடீரென்று நான் ஒரு அறையின் கதவுக்கு முன் நிற்பதையும் அதன் சாவிகள் அதுவரை எனக்குக் கொடுக்கப் படாததையும் உணர்ந்தேன். எப்போதும் நான் நுழைய ஆசைப்பட்ட அந்த அறையில் அவர் சுதந்திரமாகவும் சுலபமாகவும் நடமாடிக் கொண்டிருந்தார். எதிர்பாராத சந்திப்பாகவும் தூண்டுதலாகவும் நான் உணர்ந்தேன். எப்படி சொல்வது என்று தெரியாமல் நான் எப்போதும் சொல்ல ஆசைப்பட்டதை இன்னொருவர் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். என்னைப் பொறுத்தவரை டார்கோவ்ஸ்கி ஆகச் சிறந்தவர், திரையின் இயல்புக்கு ஏற்றவாறு வாழ்க்கையை…


ஒளி, நுகர்வு மூலம் கொரியப் படமான ‘பேரசைட்’டில் வர்க்க அமைப்பை சித்தரிக்கிறார் இயக்குனர் பாங் ஜூன்-ஹோ

பாபு சுப்பிரமணியன்

Parasite/ Bong Joon-ho/ South Korea/ 2019

‘பேரசைட்’டில் சாய் வூ-ஷிக், சாங் கங்-ஹோ , ஜங் ஹை-ஜின் & பார்க் ஸோ-டாம்

திரை ஆர்வலர்கள் தென் கொரிய இயக்குனர் பாங் ஜூன்-ஹோவின் ‘மெமரீஸ் ஆஃப் மர்டர் ‘ (2003), ‘மதர்’ (2009) போன்ற அருமையான படங்களைப் பார்த்திருப்பார்கள். ‘மெமரீஸ் ஆஃப் மர்டர் ‘, தென் கொரியாவில் முதன் முதலாக நடந்த தொடர் கொலைகள் பற்றிய உண்மைக்கதையை அடிப்படையாகக் கொண்டது. யார் கொலைகாரன் என்ற மர்மத்தை கட்டவிழ்க்க காவல்துறை காட்டிய மிருகத்தனத்தையும், திறமையின்மையையும் சித்தரித்தது. மனத்தை நெருடுகின்ற ‘மதர்’, தன் அறிவுத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி மகனை பொத்திப் பொத்தி காத்து வரும் விதவை பற்றியது. பாங் ஜூன்-ஹோவின் சமீபத்திய படமான ‘பேரசைட்’, கேன் பாம் டோர் (Cannes Palme d’Or) மற்றும் பல விருதுகளை அள்ளிக் குவித்து விட்டு இப்போது நான்கு ஆஸ்கர்களை பெற்றிருக்கிறது — அவற்றில் தலை சிறந்த படத்திற்கான விருது முதன் முறையாக ஆங்கிலமல்லாத வேற்று மொழிப் படமான ‘பேரசைட்’டுக்கு கிடைத்திருக்கிறது…


பாபு சுப்பிரமணியன்

சினிமாவை இலக்கியத் தரத்துக்கு உயர்த்த முயல்கிறார் துருக்கிய இயக்குனர் சீலன்

The Wild Pear Tree/ Nuri Bilge Ceylan/ Turkey/ 2018

‘தி வைல்ட் பேர் ட்ரீ’’ யில் ஐடின் டோகு டெமிர்கொல், ஹசர் எர்குக்லு

நியூரி பில்ஜ் சீலனின் ‘தி வைல்ட் பேர் ட்ரீ’ 2018 இல் வந்த திரைப்பட விழாப் படங்களில் தலை சிறந்தது. சீலனின் அருமையான படமான ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் அனடோலியா’ (2011) மற்றும் கேன் விருது பெற்ற ‘வின்டர் ஸ்லீப்’ (2014) ஆகிய இரண்டையும் திரைப்பட ஆர்வலர்கள் பார்த்திருப்பார்கள். ‘தி வைல்ட் பேர் ட்ரீ’யில், சனாக்கலே என்ற நகரத்தில் கல்லூரியில் படித்து விட்டு இலக்கியம் படைக்க வேண்டுமென்ற கனவுடன் சொந்த ஊர் திரும்புகிறான் சினான். அந்த சிற்றூரில் இலக்கியம் பற்றிப் பேசக் கூட ஆளில்லை. அவனுடன் பள்ளியில் படித்தவள் ஒரு நகை வியாபாரியைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறாள். பள்ளி ஆசிரியரான அவனது தந்தை இத்ரிஸ், சூதாட்டத்தில் சொத்தை இழக்கிறார். …


மனித நிலை மேல் ஒளி பாய்ச்சிய இங்மார் பெர்க்மனின் இருண்ட சினிமா

பாபு சுப்பிரமணியன்

பெங்களூரு திரைப்பட விழாவில் பெர்க்மன் நூற்றாண்டு அஞ்சலியில் காட்டப்பட்ட படங்கள் — ஒரு பார்வை

Ingmar Bergman

உலக சினிமா ரசிகர்கள் சுவீடன் நாட்டு இயக்குனர் இங்மார் பெர்க்மன் பற்றி தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூட அவர்கள் பார்த்த பெர்க்மன் படங்களில் ஒன்றின் பெயரையாவது சொல்வார்கள். “இயக்குனர்களின் இயக்குனர்” ஆன அவரது முக்கிய படங்கள் ஒவ்வொன்றையும் முன் மாதிரியாகக் கொண்டு ஐந்தாறு படங்களாவது வந்திருக்கின்றன!

குற்ற உணர்வு, அடக்குமுறை, தண்டனை ஆகியவை அவரது படங்களின் தொடர் கருத்துகளில் (recurring themes) சில. பாதிரியாரான அவருடைய தந்தை சிறு வயதில் தண்டனைகள் கொடுத்து பெர்க்மன் திருந்த வேண்டுமென்று அவமானப் படுத்தியிருக்கிறார். Fanny and Alexander என்ற படத்தில் வரும் பிஷப் வர்கீரஸ் பாத்திரத்தைத் தனது தந்தையை ஒட்டிதான் உருவாக்கினாராம் பெர்க்மன். அலெக்ஸாண்டர் பாத்திரம் சிறு வயது பெர்க்மன்தான். அவரது தாய் பெர்க்மன் மேல் விருப்பும் வெறுப்பும் கலந்து காட்டினார். நோய்வாய்ப்பட்ட குழந்தை பெர்க்மன்…


“ஆஸ்கர் புறக்கணித்த லீ சாங்-டாங்கின் கொரியன் படம் #Burning எப்படியிருக்கிறது?!”

பாபு சுப்பிரமணியன்

ஜப்பானிய எழுத்தாளர் ஹருகி முரகாமியின் “பார்ன் பர்னிங்” (Barn Burning) சிறுகதையின் தழுவல்தான், இந்த `பர்னிங்’ கொரியன் படம்.

மூலம்

கொரிய இயக்குநர் லீ சாங்-டாங் `ஒயேசிஸ்’ (2002), `போயட்ரி’ (2010) போன்ற அருமையான படங்களின் மூலம் திரைப்பட விழாக்களில் ரசிகர்களைக் கவர்ந்தவர். 8 வருடங்கள் கழித்து இவர் எடுத்த `பர்னிங்’ (2018) கேன்ஸ் திரைப்பட விழாவில் விமர்சகர்களால் கொடுக்கப்படும் FIPRESCI பரிசு பெற்று, ஆஸ்கர் 2019 குறும் பட்டியலில் இருந்தது. ஆனால், அது ஆஸ்கருக்கு நாமினேட் செய்யப்படாததில், சாங்-டாங் ரசிகர்களுக்கு வருத்தம்தான். `பர்னிங்’ ஜப்பானிய எழுத்தாளர் ஹருகி முரகாமியின் “பார்ன் பர்னிங்” என்ற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட த்ரில்லர்.

முழு விமரிசனத்தை விகடன் டாட் காமில் படிக்கலாம்:

Babu Subramanian

#Burning #MovieReview #Tamil #WorldCinema


``கதை சொல்லும் அழகுக்காகவே இதைப் பார்க்கவேண்டும்!” — #TheBalladOfBusterScruggs ஒரு பார்வை!

பாபு சுப்பிரமணியன்

வெஸ்டர்ன் சினிமா ரசிகர்களுக்கு, நெட்ஃபிளிக்ஸில் கோயென் சகோதரர்களின் விருந்து. #TheBalladOfBusterScruggs

மூலம்

அமெரிக்காவில் சுமாராக 1860-லிருந்து 1910-வரை மேற்குப் பகுதியில் சட்டம், ஒழுங்கு இல்லாத நிலையில் எல்லை ஊரில் (frontier town) வாழும் மக்களையும், அவர்களது போராட்டங்களையும் பற்றிய படங்களே வெஸ்டர்ன். பெரும்பாலும் அவை நாடோடியாகச் சுழல் துப்பாக்கியுடன் குதிரைமேல் செல்லும் மேய்ப்பாளன் (cowboy) பற்றியவை. ரயில் பாதை வந்து நாகரிகம் எல்லை ஊருக்குள் நுழையும்போது, மேய்ப்பாளன் ஊரை விட்டு இன்னும் மேற்கே செல்வான். கோயென் சகோதரர்களான ஜோயெல் கோயெனும், ஈதன் கோயெனும் எடுத்த `நோ கன்ட்ரி ஃபார் ஓல்ட் மென்’ 1980-ல் நடந்தாலும், வெஸ்டர்னுக்கான அம்சங்கள் இருப்பதால், அதைப் புதிய வெஸ்டர்ன் என்கிறார்கள். 2010-ல் அவர்கள் எடுத்த `ட்ரூ க்ரிட்’ பழங்காலத்தில் நடப்பதால், அதுதான் அவர்களின் முதல் வெஸ்டர்ன். அதுகூட ஒரு பழைய படத்தின் ரீமேக். தற்போது அவர்கள், 25 வருடங்களுக்கு முன்னால் எழுதிய சிறுகதைகளுடன், ஜாக் லண்டனின்…


``நெட்ஃபிளிக்ஸ் வெளியீடான, `ரோமா’வுக்கு ஆஸ்கர் வாய்ப்பு அதிகம்!’’ #Roma

பாபு சுப்பிரமணியன்

“விருதுகளுக்கான ஃபார்முலாவில் எடுக்கப்பட்டிருக்கும் `ரோமா’வில் குரோனின் இளவயது படிமங்கள் சோகத்திலிருந்து நம்மை விடுவித்து, படத்தின் தரத்தையும் உயர்த்துகின்றன.’’

மூலம்

மெக்ஸிகோவில் 60-களின் இறுதியில் மாணவர்களின் இயக்கத்தை ஒடுக்க “லாஸ் ஹல்கொனேஸ்” (பருந்துப் படை) என்ற துணை ராணுவப் படை ஒன்று உருவாக்கப்பட்டது. 71-ல் பருந்துப் படை, மெக்ஸிகோ நகரத்தில் ஊர்வலமாகச் சென்ற மாணவர்களைக் கம்பால் அடித்து, துப்பாக்கியால் சுட்டு 120 பேரைக் கொன்றது. “கார்பஸ் கிறிஸ்டி படுகொலை” என்று அழைக்கப்படும் இந்தச் சம்பவம்தான், மெக்ஸிகன் திரைப்பட இயக்குநர் அல்ஃபான்ஸோ குரோனின், `ரோமா’ படத்தின் பின்னணி.

முழு விமரிசனத்தை விகடன் டாட் காமில் படிக்கலாம்:

Babu Subramanian

#Roma #MovieReview #Tamil #WorldCinema

Thirai Naanooru

Writings in Tamil on World Cinema by Babu Subramanian. https://medium.com/@babusubramanian https://medium.com/@400films

Get the Medium app

A button that says 'Download on the App Store', and if clicked it will lead you to the iOS App store
A button that says 'Get it on, Google Play', and if clicked it will lead you to the Google Play store